அச்சச்சோ.. தினமும் டீ குடிப்பிங்களா? இனி இந்த மாதிரி செய்யாதீங்க., உயிரே போயிடுமாம்..! அதிர்ச்சி உண்மை.!!
சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
டீ என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். டீயை சூடாக பருக மட்டுமே பலரும் விரும்புவர். ஆனால் அப்படி பருகுவது தொண்டைக்கு இதமாக இருப்பினும், உணவு குழாயை பெருமளவில் பாதிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது "140° பாரன்ஹீட் வெப்பநிலையில் டீ பருகினால் உணவுக்குழாயில் புற்றுநோய் உருவாகக்கூடும்" என்கிறார் டாக்டர் பர்ஹத் இஸ்லாமி.
"டீ மற்றும் காபி போன்றவர்களை தயாரித்து சில நிமிடங்களாவது வைத்து மிதமான சூட்டில் பருகுவது தான் நல்லது. டீ தயாரித்து முடிப்பதற்கும், பருகுவதற்கும் இடையே குறைந்தது நான்கு நிமிடங்கள் இடைவெளியாவது இருக்க வேண்டும்" என்று கூறுகிறார்.
மேலும் டீ மட்டுமின்றி எந்த ஒரு பானமாக இருந்தாலும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் உடனே பருக கூடாது. இது குறித்து டாக்டர் இஸ்லாமி தலைமையிலான ஆய்வு குழுவினர் 40 முதல் 75க்கு உட்பட்ட தேநீர் பிரியர்களிடம் 50,045 பேரை ஆய்வு செய்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொண்டையில் இருந்து வயிற்றுக்கு செல்லும் உணவுக்குழாயின் உள்பகுதி செல்களில் டீயை சூடாக குடிப்பதன் மூலமாக இந்த புற்றுநோய் உருவாங்குகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புற்றுநோய்க்குப்பின் உயிரே போகும் அபாயமும் உள்ளது. புற்றுநோய் வந்தபின் சரியாக கவனிக்காவிடில், உயிரே போய்விடும். இதனை அறிந்து இனியாவது டீ பிரியர்கள் அதனை சூடாக குடிக்காமல் சிறிது நிமிடங்கள் ஆறவைத்து பருகலாம்.