மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது அருந்திய பிறகு இதனை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து! மதுபிரியர்களே உஷார்!
தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைஞர்கள் சிறுவயதிலேயே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. தயவு செய்து இளைஞர்கள் இந்த பழக்கத்தை கற்று கொண்டு மதுவுக்கு அடிமையாகி உங்களது அடுத்த தலைமுறையை இழக்காதீர்கள்.
தற்போது பலருக்கு உடல்நலத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், மதுவை பருகினாலும் அதனால் ஏற்படும் பிரச்சனையை சற்று குறைக்க சில உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.
மது அருந்திய பிறகு எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மது அருந்திய பின் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. அதேபோல் அதிக அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் விரைவில் உயிரிழக்க நேரிடும்.
மது அருந்தியபிறகு அகத்தி கீரை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். மதுபழக்கத்தை கற்றுக்கொண்டவர்கள் சிறிது சிறிதாக அப்பழக்கத்தை கைவிடுவது அவர்களது குடும்பத்திற்கு நல்லது. குடிப்பழக்கத்தினால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளது.