அடிக்கடி அந்தரங்க பகுதியில் கிளீன் ஷேவ் செய்பவரா நீங்கள்?.. உஷார் மக்களே கவனமாக இருங்கள்.!



Don't shave hair in private parts

என்னதான் நாம் பல விஷயங்களில் நமது பொது மற்றும் அனுபவ அறிவு மூலமாக கற்று தெரிந்துகொண்டாலும், சில விஷயங்களை பற்றி இன்று வரை தெரிந்துகொள்வதில்.தயக்கம் காண்பிக்கிறோம். இன்று அந்தரங்க உறுப்பில் உரோமம் இருப்பதற்கான காரணம் மற்றும் அவை குறித்த தகவலை தெரிந்துகொள்வோம். 

தினமும் நாம் குளிக்கும்போது, ஆண்கள் அந்தரங்க உறுப்பின் முன்தோலை தள்ளி, அப்பகுதியில் இருக்கும் அழுகை சுத்தம் செய்ய வேண்டும். தொடையின் இடுக்கு பகுதியில் இருக்கும் அழுக்குகள் நீங்கும் அளவு சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். 

குளித்து முடித்ததும் தொடை மற்றும் அந்தரங்க உறுப்பை சுற்றிலும் ஈரம் இல்லாதவாறு துடைக்க வேண்டும். இவை பூஞ்சை தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். 

பிறப்புறுப்பில் விந்தணு உற்பத்திக்கு வெப்பம் குறைந்தளவு இருக்க வேண்டும். இதனால் பிறப்புறுப்பை சுற்றிலும் வியர்வை துருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து வியர்வை சுரந்து உடலின் வெப்பத்தை சீராக வைக்கும். 

Lifestyle

பெண்களை பொறுத்தமட்டில் பெண்ணுறுப்பின் வெப்பநிலை சரியாக இருந்தால் மட்டுமே கருமுட்டை உற்பத்தி ஊக்குவிக்கப்படும். பெண்களுக்கும் பிறப்புறுப்பை சுற்றிலும் வியர்வை துவாரங்கள் இருக்கின்றன. 

இருபாலரும் மாதம் ஒருமுறை டிரிம்மர் உபயோகம் செய்து அந்தரங்க பகுதிகளில் உள்ள உரோமத்தின் நீளத்தை குறைக்கலாம். அடிக்கடி ஷேவ் செய்வது நல்லதல்ல. மூன்று அல்லது 2 மாதத்திற்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம். 

இன்றளவில் திரைமறைவில் பார்க்கப்படும் ஆபாச படங்களில் உள்ளதை போல, ஷேவ் செய்து சுத்தமாக உள்ள அழகு நல்லது என நினைக்க வேண்டாம். உரோமம் அதிகம் இருக்கும் தலையை அழுக்கு தேய்த்து குளித்து சுத்தம் செய்வதை போல, அந்தரங்க பகுதியிலும் சுத்தம் செய்ய வேண்டும். 

உடலிலும் சரி, அந்தரங்க பகுதியிலும் சரி உரோமம் வளர்வது இயல்பானது. நமது உடலை சுத்தமாக வைத்து பராமரித்தாலே ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. அந்தரங்க பகுதிகளில் அதிக கெமிக்கல் உள்ள சோப்களை உபயோகம் செய்ய கூடாது. நேரடியாகவும் சோப்களை அந்தரங்க பகுதிக்குள் செல்லும் வகையில் உபயோகம் செய்வதும் தவறானது.