மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நரம்பு பிரச்சனைகளை தீர்க்கும், ஒற்றை டீ.! எப்படி செய்வது.?!
இந்த அற்புத தேநீரை தயாரிக்க தேவையான பொருட்கள் என்னவென்றால், எலுமிச்சை இலை 10, தண்ணீர் ஒரு டம்ளர், தேன் ஒரு ஸ்பூன் ஆகும்.
தேநீர் செய்யும் முறை:- முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் எலுமிச்சை இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
இந்த தேநீரை வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தலைவலி குணமாகும். இந்த தேநீரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், சிட்ரிக் அமிலம், இரும்பு, பாஸ்பரஸ், ஃப்ளேவனாய்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் நரம்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.
இந்த சத்துக்கள் நிறைந்த தேநீரை குடிப்பதன் மூலம் மூளைக்கு தேவையான ஆக்சிஜனை அனுப்பி அதன் வழியாக மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தேநீரை வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயமாக எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் இதை குடித்தால் நிம்மதியாகவும், எந்த கவலையும் இன்றி தூங்கலாம்.
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த தேநீரை குடிக்கலாம். இதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கலாம். எடையை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை இலையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கிறது. எலுமிச்சை இலையை நேரடியாக உட்கொள்ள முடியாததால் லெமன் டீ, சூப் மற்றும் சாஸ்களில் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறார்கள். மேலும் இதய நோய் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
இந்த எலுமிச்சை இலை தேநீரை உட்கொள்ளும்போது செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள உட்பொருட்கள் குடல் வீக்கத்தையும் சரி செய்கிறது.
இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் நரம்பு மண்டலம் அமைதி பெறுகிறது. பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.