காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவரா? நீங்கள்.. இந்த செய்தி உங்களுக்குத்தான்..!
பொதுவாக நாம் குளிக்கும்போது நம்மை அறியாமலேயே சில நேரம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். உள்ளாடை இன்றி குளிக்கும் சிலர் சிறுநீர் கழித்துவிட்டு குளியலையும் மேற்கொள்வார்கள், இன்னும் சிலரோ இடுப்பில் துணியோடு குளிக்கும் நீரோடு நீராக போகட்டும் என சிறுநீர் கழிப்பார்கள்.
இயற்கையாக சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றும் உறுப்புக்கள் இடுப்பு பகுதியில் இருக்கின்றன. இந்நுட்பம் கொண்ட உறுப்புகளின் துளைகளின் வழியே கிருமிகள் காற்றின் வழியே நுழைய அனுமதிக்க கூடாது. இதனாலேயே இடுப்பில் துணி இன்றி குளியல் மேற்கொள்ள கூடாது என சிலர் கூறுவார்கள்.
பண்டைய காலங்களில் திறந்தவெளி குளியல் என்ற முறை பெருவாரியாக இருந்து வந்தது. இதனால் பிறருக்கு அருவெறுப்பு ஏற்படக்கூடாது என்பதால் உடை அணிந்து குளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, நாம் குளிக்கும்போது அலட்சியமாக உள்ளாடையில் சிறுநீர் கழித்தால், முறையாக நாமும் நமது உடலை சுத்தம் செய்ய வேண்டும். உள்ளாடையையும் சுத்தம் செய்ய வேண்டும். அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் நோய்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.