ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குளிர்-மழை காலங்களில் பாலியல் ஆசை அதிகரிப்பது ஏன்? இதுதானா சங்கதி?.. தம்பதிகளே சில்லாக்கி-டும்.!
திருமணமான தம்பதிகள் தங்களின் எதிர்கால சந்ததியை உருவாக்கவும், தனிமையான இரவு நேரங்களை மகிழ்ச்சியாக கொண்டாடவும், தங்களுக்கு இடையேயான பாச பந்தத்தை அதிகரிக்கவும் உடலுறவு மேற்கொள்கின்றனர். திருமணம் முடிந்த தொடக்கத்தில் காணப்படும் அதிக நெருக்கம் பின்னாளில் வேலைப்பளு, துரித வாழ்க்கை சூழ்நிலை, குழந்தைகள் வளர்த்தல் உட்பட பல்வேறு காரணங்களால் குறைகிறது.
மழை பேயும் போது...
எது எப்படி இருந்தாலும் காலம் அனைத்தையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம், மழைக்காலம் தொடங்குவதைப்போல, ஆண்-பெண் இருவருக்கும் பாலியல் வேட்கை ஆசை தொடங்கிவிடும். பிற நாட்களை காட்டிலும், மழை நேரங்களில் குளுமையான சூழலை அனுபவிக்க மனம் ஏங்கும். இதற்கு காரணமாக அறிவியல் ரீதியான காரணமும் கூறப்படுகிறது.
ஹார்மோன் சுரப்பு
அதாவது, குளிர்காலத்தில் பகல் குறைவாகவும், இரவு நீண்டும் இருக்கும். இதனால் உடலில் மெலடோனின் ஹார்மோன் அதிகம் சுரந்து உறக்கம் அதிகரிக்கும். இதனால் நீண்ட நேரம் போர்வையை போர்த்தியபடி உறங்குவோம். அதேபோல, பாலியல் ஆசைக்கு காரணமாக இருக்கும் டெஸ்டோஸ்ட்டிரோன் ஹார்மோனும் தூண்டப்பட்டு, பாலியல் உறவு ஆசை ஏற்படும், இருவருக்கும் உடல் சக்தியும் அதிகரிக்கும்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன?
மேலும், குளிர்காலத்தில் சுரக்கும் ஆக்சிடோசின் ஹார்மோன் காதல் உணர்வை அதிகரிக்கும். இதனால் தம்பதிகளின் நெருக்கம் அதிகரிக்கும். ஆணுக்கு டோபமைன் ஹார்மோன், பெண்ணுக்கு ஈஸ்ட்டிரோஜன் ஹார்மோன் சுரக்கும்.இதனால் வழக்கத்தை விட கூடுதலான ஊடல்-கூடல் தொடரும். பொதுவாக குளிர் நேரங்களில் நாம் வெளியே சுற்றமாட்டோம் என்பதால், தானாகவே சிந்தனையை தூண்டி உடல் நெருக்கம் உண்டாகும்.
குளிரடிக்குதே..
காரசாரமான மசாலா உணவுகள் இரத்த ஓட்டத்தையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் என்பதால் மூளை னரமைப்புகள் தூண்டப்படும். டார்க் சாக்லேட், மாதுளைப்பழம், போன்றவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடிய உணவுகள் ஆகும். இவற்றை மழை நேரங்களில் சாப்பிடுவது தம்பதிகளுக்கு உடலுறவு ஆசையை இயல்பாக வரவழைத்துவிடும். இதனாலேயே குளிர்காலத்தில் அதிக நெருக்கம் உண்டாகியுள்ளது.
தம்பதிகள் இருவரும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நெருங்கினால் என்றும் அவர்களின் பந்தபாசம் நிரந்தரமாக நீடிக்கும் என்பதே நிதர்சனம்.