இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள எளிமையான 10 சமையலறை டிப்ஸ்...
வீட்டுக்குத் தேவையான சமையல் அறைக்கு தேவையான பயனுள்ள 10 குறிப்புகள்:
1. கடையிலிருந்து வாங்கிய வெண்டைக்காய்களை சுத்தமாக தண்ணீரில் கழுவி விட்டு, ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து, காம்புப் பகுதியையும் தலை பகுதியையும் வெட்டி ஒரு கவரில் போட்டு, உள்ளே காற்று இல்லாமல் சுருட்டி வைத்தால் 15 நாட்களுக்கு வெண்டைக்காய் முற்றிப் போகாமல் நன்றாக இருக்கும்.
2. சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது மஞ்சள் பொடி, பெருங்காயம், பூண்டு, இவைகளை சேர்ப்பது வழக்கம். இதோடு கொஞ்சமாக வெந்தயத்தையும் சேர்த்து பருப்பு வேக வைத்தால் சாம்பார் நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும். மாலை நேரத்தில் சூடு செய்ய மறந்து விட்டாலும், இரவு சாம்பார் கெட்டுப் போகாது.
3. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், இவைகளை நிறைய வாங்கி வைத்து ஸ்டோர் செய்தால் அதில் சிக்கு வாடை பிடிக்கும். இப்படி எல்லா எண்ணெய் வகைகளிலும் சில மிளகுகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு சிக்கு வாடை அடிக்காது. ஒரு லிட்டர் எண்ணெய்க்கு ஏழி லிருந்து எட்டு மிளகு வரை சேர்க்கலாம்.
4. மிளகு சீரகம் வரமிளகாய் கொத்தமல்லி இந்த நான்கு பொருட்களையும் கடாயில் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். டிபன் சாம்பார் வைத்து விட்டு, அடுப்பை அணைதப்பதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு இந்த பொடியை சேர்த்தால் சாம்பார் மணமணக்கும்.
5. எந்த காய்கறியை வறுக்கும் போதும் சரி, கடாயில் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து அதன் பின்பு காய் சேர்த்து வறுக்கும் போது, காயின் சுவை கூடும்.
6. சீஸ், யோகர்ட், தர்பூசணி, கிர்ணி பழம், கிச்சடி பழம், உருளைக்கிழங்கு, இறைச்சி, மீன், பீன்ஸ் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் சாப்பிட்டிருந்தாலும் இதோடு சேர்த்து பால் குடிக்கக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.
7. கார குழம்பு, மீன் குழம்பு, வத்த போன்ற குழம்பு வகைகளை திக்காக வைக்க வேண்டுமென்றால் அதில் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
8. பாத்திரம் தேய்க்க கூடிய ஸ்பாஞ்ச் ஸ்கரப்பரை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். இந்த ஈரமான ஸ்கிரப்பரில் பேக்கிங் சோடாவை தொட்டு, சுவற்றில் குழந்தைகள் பென்சில் அல்லது பேனாவினால் கிறுக்கி வைத்த கிறுக்கல்களை துடைத்தால், சுவற்றில் உள்ள கிறுக்கல்கள் சுலபமாக மறைந்துபோகும். சுவற்றில் இருக்கும் அழுக்குகளும் நீங்கி விடும்.
9. பீட்ரூட்டை நீங்கள் மற்ற காய்கறிகளுடன் சமைக்கும் பொழுது இதனுடைய நிறம் மற்ற காய்களிலும் ஒட்டிக் கொள்ளும். இதனை தவிர்க்க முதலில் பீட்ரூட்டை தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கிய பின்பு மற்ற காய்கறிகளுடன் சேர்த்து செய்யும் பொழுது இதன் நிறம் அதில் சேராது.
10. மிருதுவான பன்னீர் தயாரிக்க ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்கவிட்டு காய்ச்சிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் நன்கு சுத்தமான துணியில் இட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சப்பாத்தி கட்டையில் போட்டு தேய்த்து கட்டம் கட்டமாக வெட்டி வைத்துவிட்டால் மூன்று நாட்கள் வரை ஃப்ரீஸரில் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.