தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தேர்வெழுதும் மாணவ - மாணவிகள் உடல், மன ரீதியாக தயாராகுவது எப்படி?.. மாணாக்கர் செல்வங்களே அசத்துங்கள்.!
மாணவர்கள் பொதுத்தேர்வில் அக்கறை செலுத்தும் அதே அளவு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவையாவன என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
★தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், ஸ்மார்ட்போன், கணினி மற்றும் மடிக்கணினி திரைகளை மாணவர்கள் அதிகம் கவனித்து படிக்கின்றனர். இது அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
★தொடர்ச்சியாக படித்துக் கொண்டே இருப்பதால், மூளை சோர்வடையும். போதுமான அளவு மூளைக்கு ஓய்வு கொடுப்பது முக்கியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் நன்றாக தூங்குவது போன்ற விஷயங்களை பின்பற்றினால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
★படுத்துக் கொண்டே படிப்பதால், அது விரைவில் கண்களை சோர்வடைய செய்துவிடும். மேலும், படிக்கும் போது புத்தகத்திற்கும் கண்ணுக்கும் இடையே 25 சென்டி மீட்டர் இடைவெளியில் பராமரிக்க வேண்டும்.
★ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் படிப்பதால் விரைவில் சோர்வடைந்து விடுவீர்கள். எனவே, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 10 நிமிடம் படிப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
★படிக்கும்போது நொறுக்கு தீனிக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் கண்களின் ஆரோக்கியத்திற்கும், மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கும் துணைபுரியும்.
★படுக்கும் அறையில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும். மங்கலான வெளிச்சம் நிலவுவதால் விரைவில் கண்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
★படிக்கும் போது தூக்கம் வந்தால் கண்களை தனது கைகளால் தேய்க்க கூடாது. அது கண்ணுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துவிடும். அதற்கு பதில் குளிர்ந்த நீரை கண்களின் சீரான இடைவெளியில் தெளித்து வரலாம்.
★ஆன்லைனில் படிக்கும் போது மானிடரை 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். இல்லையெனில், அது கண்ணனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
★கால அட்டவணை தயாரித்துவைத்து கொண்டு படிப்பது, தூங்குவது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று இருந்தால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்,
★உடலில் நீர் அச்சத்தை பராமரிப்பது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதனை தேர்வு சமயத்தில் தவறாமல் பின்பற்றினால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.