மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படி., எப்படியாவது படிச்சிடு.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகும் தனிநபரின் வாழ்க்கை சாதனை..!
முகநூல் பக்கத்தில் வைரலாகும் ஒரு பதிவில் எப்படியாவது படித்துவிடுங்கள் என்பதை மையகருத்தாக தெரிவித்து, பாலா என்பவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "கடந்த 2006ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மளிகை கடையில் ரூ.50 க்கு வேலைக்கு சேர்ந்தேன். அரசு கல்லூரியில் B.Sc Chemistry படிக்க வாய்ப்பும் கிடைத்தது. மதியம் வரை கல்லூரியில் படித்துவிட்டு, அதன்பின்னர் இரவு 10 மணி வரையிலும் மளிகை கடையில் வேலை செய்வேன்.
இரவு 10 மணிமுதல் 12 மணிவரை ரயில்வே நிலையத்தில் படித்துவிட்டு, பசி எடுத்தால் சாராய பாட்டில்களை எடுத்து வைத்துக்கொள்வேன். மறுநாள் காலையில் அதனை விற்பனை செய்து டீ, வடை சாப்பிடுவேன். இப்படியாக 6 ஆண்டுகள் கடந்து சென்றது. மெரிட்டில் அரசு கல்லூரியிலேயே M.Sc MPhill முடித்தேன்.
P.hD முடிப்பதற்கு திருச்சியில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் 2014ல் சேர்ந்தேன். 2017ல் அப்பாவும் தவறியதால் என்ன செய்வது என தெரியவில்லை. Ph.D படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம். ஆனால், பல்கலை.,யில் அனுமதி வாங்கிவிட்டு வாரம் 2 நாட்கள் காய்கறி விற்பனை செய்ய செல்வேன்.
அதில் கிடைக்கும் வருமானத்தில் வயிறு நிரம்பினால், பிற நாட்களில் ஆராய்ச்சி படிப்பு & பேராசிரியர்களின் உதவி என 2021ல் PhD முடித்தேன். இன்று பன்னாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist வேளையில் இருக்கிறேன். எனது அறிவுரை படி., நன்றாக படி., எப்படியாவது கஷ்டப்பட்டாவது படித்துவிடு - பாலா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.