பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
செல்போனை அருகில் வைத்து தூங்கும் நபரா நீங்கள்.? நிபுணர்கள் எச்சரிக்கை!!
இந்த காலத்தில் நாம் தூங்கும் படுக்கையில் தலையணை இருக்கிறதோ இல்லையோ, படுக்கைக்கு அருகே செல்போன் கட்டாயம் இருக்கிறது! கண்கள் சொக்கும் வரை செல்போனை பார்ப்பது, பின்பு தலையணைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்து தூங்குவது நமக்கு பழக்கமாகிவிட்டது. செல்போனை அலாரமாக பயன்படுத்துவது, யாரேனும் மெசேஜ் அல்லது கால் செய்தால் உடனே எடுக்க வேண்டும் என்பதற்காகவும் அருகில் வைத்து உறங்குவது என்று இதனை நியாயப்படுத்த நாம் பல காரணங்களை வைத்திருக்கிறோம்.
நமது உயிரியல் கடிகாரம் (Biological clock) மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றின் செயல்பாட்டை சீர்குலைக்கும் கதிர்வீச்சுகளை, ஸ்மார்ட் ஃபோன்கள் உருவாக்குகின்றன. இதன் விளைவாக கெட்ட கனவுகள், தூங்குவதில் சிரமம் மற்றும் பிற சிக்கல்களை தூண்டலாம். இது நம் மன ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், நம் அத்தியாவசிய தேவைக்கு பயன்படும் சில ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செல்போனை விமான மோடில் (Airplane mode) வைத்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சை வெளியிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
சிலர் படுக்கைக்கு அருகே செல்போனை சார்ஜில் போட்டுவிட்டும் தூங்குவார்கள். ஆப்பிள் நிறுவனம், இவ்வாறு செய்வதால் மின்சார அதிர்ச்சி, தீ விபத்து அல்லது காயம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது. தலைவலி, தசை வலி போன்றவற்றையும் ஸ்மார்ட் ஃபோனின் கதிர்கள் உருவாக்குகின்றன. செல்போனை தூங்குவதற்கு முன்பு நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் உடலும், மனதும் ஓய்வு எடுக்கும் நிலையை அடையாது.
ஸ்மார்ட்போன்கள் உமிழும் நீல நிற ஒளி, நம் உடலின் ஓய்வுக்கு தேவைப்படும் மெலடோனின் உற்பத்தியை குறைத்து, சர்காடியன் ரிதத்தையும் பாதிக்கிறது. நீங்கள் தூங்கி எழும்பொழுது மந்தமாகவோ அல்லது போதிய தூக்கம் கிடைக்கவில்லை என்று உணர்ந்தாலோ, அதற்குக் காரணம் நீங்கள் அருகே வைத்திருந்த செல்போன் உமிழ்ந்த நீல நிற ஒளியும் ஒரு காரணம் என்று மறவாதீர்கள்!
இவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள, செல்போனை படுக்கைக்கு அருகில் வைக்காமல், உங்கள் அறையில் உள்ள மேசை மீது வைக்கலாம். தனியாக ஒரு அலாரம் கடிகாரம் வாங்குங்கள். மேலும் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் உறங்கும் இடத்திற்கும், உங்களின் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உண்டான இடைவெளி, குறைந்தது மூன்று அடியாவது இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.