குளிர்காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் சரியாக என்னென்ன உணவுகள் சாப்பிடணும் தெரியுமா.?
குளிர்காலம் என்பது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பல்வேறு நோய்த்தாக்கம் ஏற்படும். மேலும் ஒரு சிலர் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்
இந்த மாதிரி சூழ்நிலையில் குளிர்காலத்திற்கும் நம் மனதிற்கும் ஏற்றதான உணவுகளை உண்பதன் மூலம் மனம் மற்றும் உடல் நிலைகளை சரி செய்யலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
ஒமேகா 3 சத்து அதிகம் நிறைந்துள்ள மீன்கள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தையும், மன இறுக்கத்தையும் சரிப்படுத்தும். அதிக சத்து நிறைந்த கீரைகள் மற்றும் பழங்களையும் உண்டு வரலாம்.
மேலும் டார்க் சாக்லேட் வகைகளை சாப்பிடுவதன் மூலம் மனசோர்வை குறைத்து சந்தோஷத்தை ஏற்படுத்தும் இவ்வாறு உணவின் மூலமே நம் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.