மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முடி உதிர்தல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உடனே படியுங்கள்!
கூந்தல் பராமரிப்பு என்பது அடிப்படையான விஷயங்களில் இருந்து துவங்குகிறது. தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் கூந்தலை இழக்க நேரிடலாம்.
ஷவரில் இருந்து சூடான தண்ணீர் வரும் போது அதன் கீழ் நின்று கொண்டிருப்பது இதமளிப்பதாக தோன்றலாம். ஆனால் இது உங்கள் கூந்தலின் நீர்த்தன்மையை நீக்கி, உலர் தன்மை மற்றும் உடைந்த முடியை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும், வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை அலசுவது நல்லது.
ஷாம்புவில் சிறிதளவு தண்ணீர் கலந்து முடியில் பயன்படுத்த வேண்டும்.
தினமும் உங்கள் கூந்தலை அலசாமல் இருப்பது ஆரோக்கியம் இல்லாதது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்ன எனில் தினமும் கூந்தலை அலசுவது அவசியம் இல்லை. இது இயற்கை எண்ணெய் பசையை அகற்றி, முடி உதிர்தலை உண்டாக்கலாம்.
முடிந்த வரை, உங்கள் கூந்தலை இயற்கையாக உலர வைப்பது நல்லது. ஆனால் உங்களால் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவேனில், கூந்தலை ஓரளவு உலர வைத்துவிட்டு பின்னர் டிரையர் பயன்படுத்தவும்.
இந்த காரணங்களால் தான் கூந்தல் உதிர்கின்றது என்று சொல்ல முடியாது. நாம் உண்ணும் உணவும் மிக முக்கிய காரணமாகும். கூந்தலை குளிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குளிக்கும் போது கவனத்தில் கொண்டால் போதும் கூந்தல் உதிர்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.