செரிமானத்தை சீராக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும் பிரியாணி இலையின் நன்மைகள்.!



Health benefits of biriyani leaf

நம்மில் பலருக்கும் பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவாக உள்ளது. அப்படிப்பட்ட பிரியாணியில் சேர்க்கப்படும் முக்கிய மசாலா பிரியாணி இலை. இந்த பிரியாணி இலை நறுமணத்திற்கு மட்டும் இல்லாமல், உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது.

அதன்படி பிரியாணி இலையில் நிறைந்துள்ள ஆரோக்கியமான நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பிரியாணி இலைகள் கொதிக்க வைக்கப்படும்போது அதிலிருந்து ஆவியாகும் ரசாயனங்கள் சுவாச ஆரோக்கியத்திற்கு. இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்றவை குணமாகும்.

Biriyani leaf

பிரியாணி இலைகளில் அஜீரண கோளாறுகளை குறைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அதன்படி வயிறு உப்புதல் மற்றும் வாயு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

குறிப்பாக பிரியாணி இலைகள் மன கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பிரியாணி இலைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு காரணிகள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Biriyani leaf

பிரியாணி இலைகள் கொழுப்பின் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

பிரியாணி இலைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் செல்களின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.