மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கத்தரிக்காயில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா..
நம்மில் நிறைய பேருக்கு கத்தரிக்காய் என்றாலே பிடிக்காது. அதற்கு காரணம் அதன் நிறம் மற்றும் துவர்ப்பு சுவை. பல வித வண்ணங்களில் கிடைக்கும் இந்த கத்தரிக்காய் நல்ல சத்துள்ளதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
இந்தக் கத்திரிக்காய் சாப்பிடுவதால் சிலருக்கு அரிப்பு, தோல் தடிமன் போன்ற ஒவ்வாமை ஏற்படும். ஆனாலும் இது பல வித நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் நன்மைகளைக் குறித்து இங்கு நாம் பார்ப்போம். இரைப்பை மற்றும் சளி பிரச்சனைகளைக் குறைக்கிறது.
கத்திரிக்காயை வேக வைத்து தேனுடன் கலந்து மாலையில் சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும். கத்திரிக்காயை சூப் செய்து சாதத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை குறையும். மேலும் இது கொழுப்பைக் குறைத்து, இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கத்திரிக்காய் உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிட்டு வந்தால் , சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம். கத்திரிக்காய் சாற்றில் தயாரிக்கப்படும் களிம்புகள் மூல நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன.