எப்போதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இந்த ஜூஸ் போதும்.!
பொதுவாக கேரட் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. கேரட்டை பச்சையாகவோ, சாம்பார் அல்லது பொறியலாக சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம். அதன்படி, கேரட் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் எலும்புகள் வலுவடைந்து உடல் உறுதி பெறும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து கட்டுக்குள் வைக்கும்.
உடலில் ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் பிரதமர் சரியான அளவில் இருக்க வேண்டும். எனவே கேரட் ஜூஸ் குடிப்பதால் இதன் அளவு சமநிலையில் வைக்க உதவுகிறது.
கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை நன்றாக தெரிய உதவுகிறது. ஏனென்றால் கேரட்டில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. அதன் காரணமாக கண் பார்வை மேம்படும்.
கேரட் ஜூஸ் குடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் இரத்தப்போக்கை சரி செய்கிறது. குறிப்பாக கேரட் ஜூஸ் குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.