ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு அற்புத உணவாகும் உலர் திராட்சை!
பொதுவாக திராட்சையின் அனைத்து வகைகளுமே உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது. இதில் உலர் திராட்சை உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே, உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு, அதனை குறைக்க பலரும் பல்வேறு வகையான உடற்பயிற்சி முறைகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றி வந்தாலும் குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அவ்வாறு உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடல் எடை எளிதாக குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி உலர் திராட்சை சாப்பிடுவதால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி குடல் இயக்கத்தை விரிவு படுத்த முக்கிய பங்கு வைக்கிறது.
உலர் திராட்சையில் நார்சத்து உள்ளதால் நீண்ட நேரம் பசியின்மையை ஏற்படுத்தி வைக்கிறது. அதேபோல் உணவை வேகமாக செரிக்க செய்து வயிற்றை சுத்தம் செய்கிறது.
குறிப்பாக உலர் திராட்சையை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உலர் திராட்சை சாப்பிடுவதற்கு சரியான நேரம் காலை மற்றும் மாலை நேரமாக இருப்பது அவசியமாகும்.