வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?



health-benefits-of-eating-raw-banana

வாழைக்காய் என்பது உடலுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும் உணவாகும். இது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பலவகையான சத்துக்களை கொண்டுள்ளது. அதன் முக்கியமான சத்துகள் மற்றும் நன்மைகளை குறித்து மருத்துவர் கார்த்திகேயன் கூறியவற்றை   இப்பதிவில் பார்க்கலாம்.

வாழைக்காயில் உள்ள சத்துக்கள்:
பொட்டாசியம் : வாழைக்காயில் அதிக அளவு பொட்டாஷியம் உள்ளது. இது இதய செயல்பாடுகளை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
புரோட்டீன் : வாழைக்காய் சாப்பிடுவதன் மூலம் ஒரு நாளிற்கு தேவையான புரோட்டின் நம் உடலிற்கு கிடைக்கிறது.
நார்ச்சத்து: வாழைக்காயில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது குடல் செயல்பாட்டை சீராக்கி, மலசிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
விட்டமின்கள்: வாழைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் B6, மற்றும் வைட்டமின் A ஆகியவை உள்ளன.குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையைத் தவிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வாழைக்காய் உதவுகிறது. மேலும் மினரல்ஸ், கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற முக்கிய சத்துகளும் உள்ளன.

banana

வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1. மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
2.அதிகளவு பொட்டாசியம் குறைந்தளவு சோடியம் கொண்டுள்ளதால் இது இரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலுக்கு சீராக இரத்த ஓட்டத்தை கொண்டு செல்கிறது.
3. வாழைக்காயில் உள்ள வைட்டமின் B6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடல் உறுப்புகளுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது.
4. வாழைக்காய் தோல் பாதிப்புகளை சரி செய்து பளபளப்பாக இருக்க செய்கிறது.
5.ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தும்.
6. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது.
எனவே, வாழைக்காயை பொறியாலாக உட்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டு குடல் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.!?

இதையும் படிங்க: குளிர் காலத்தில் அதிகமாக டீ குடிக்கிறீங்களா.!? உங்களுக்குதான் இந்த அதிர்ச்சி செய்தி.!