53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உடலை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கிரீன் ஆப்பிளின் நன்மைகள்.!
பொதுவாக ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது. இதில் சிவப்பு ஆப்பிள் மற்றும் கிரீன் ஆப்பிள் என இரண்டு வகைகள் உள்ளது. இதில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் ஆப்பிள் சாப்பிடுகின்றனர்.
எனவே, கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். கிரீன் ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் ஆண்டிஆக்டன்கள் நிறைந்துள்ளது.
கிரீன் ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார் சத்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
குறிப்பாக கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும் கண் பார்வையை தெளிவாக தெரிய வைக்கிறது.
கிரீன் ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் கிரீன் ஆப்பிளில் உள்ள குறைந்த கலோரிகள் மற்றும் நார்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.