தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கேழ்வரகின் நன்மைகள் தெரியுமா?
சிறுதானியங்களில் மிகச்சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாக இருப்பது கேழ்வரகு. இந்த கேழ்வரகை கூழ், களி மற்றும் அடை என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். எனவே கேழ்வரகு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கேழ்வரகு ஊட்டச்சத்து நிறைந்த மிகச் சிறந்த உணவு பொருள். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் பி1, பி6 மற்றும் கே போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேழ்வரகில் அதிக அளவில் நார் சத்து நிறைந்துள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. குறிப்பாக இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், இது கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. கேழ்வரகில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் இரும்பை வலுவாக வைக்க உதவுகிறது.
ஆனால் கேழ்வரகு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான நார் சத்து வயிற்றுப்போக்கு வாயை போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கேழ்வரகு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடியது. எனவே சிலருக்கு தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். எனவே கேழ்வரகு அழகாக சாப்பிடுவது நல்லது.