மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்மார்ட்போன்னே கதின்னு இருக்கீங்களா? அப்போ கட்டாயம் இத படிங்க! நிறைய அதிர்ச்சி காத்திருக்கு!
மனிதனின் நாகரிக வளர்ச்சிகளும் அதை சார்ந்த கண்டுபிடிப்புகளும் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதில் ஒன்றுதான் ஸ்மார்ட் போன். பிறந்த குழந்தைகள் கூட இன்று ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் அளவிற்கு அதன் ஆதிக்கம் வளர்ந்து நிக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்துதான் இருக்கிறது. நீண்ட நேரம் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சுக்கள் உடலில் பல பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த கதிர்வீச்சு மூளையின் செல்களை தூண்டி விடுவதால் மூளை விழிப்புடன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது.
இன்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் நேரம் போவதே தெரியாமல் தொலைபேசியில் உரையாடுகின்றனர். அவ்வாறு நீண்ட நேரம் பேசுவதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் தொலைபேசியில் இருந்து வரும் கதீர் வீச்சு நமது மூளையை தாக்கி கேன்சர் வரை கொண்டு செல்லும் அபாயம் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் தொலைபேசியில் பேசும்போது வலதுபுறமாக பேசுவது மிகவும் நல்லது.
நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் நாம் கண் இமைக்கும் நேரம் குறைந்து நமது கண் பாதிப்படைகிறது. இதனால் கண் எரிச்சல், கண்ணீல் நீர் வடிதல் போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தவே கூடாது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் பொது கருவில் உள்ள குழந்தையை அது பாதிக்கும்.
.மாணவர்கள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்துவதினால் அவர்களுக்கு மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர் என சில ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செல்போன் அதிகமாக பயன்படுத்துவதால் சில பெண்கள் மிக சிறிய வயதிலே பூப்படைகின்றனர். இதற்கு காரணம் செல்போன்களில் உள்ள ஒளி காரணமாக உடலில் மெலடோனின் குறைபாடு உண்டாகி ஹார்மோன் சுழற்சியில் குழப்பம் ஏற்படுவதுதான்.