"தீபாவளி பலகாரத்தோட இந்த லேகியமும் செய்யலாமா!" செய்முறைக்கு கீழே படிங்க!



healthy-food-for-diwali

தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும், பலகாரங்களும் தான். இன்றும் பலரது வீடுகளில் தீபாவளிக்கு முன்பிருந்தே பலகாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பெரும்பாலும் எண்ணெய் பலகாரங்களான முறுக்கு, சீடை, அதிரசம் ஆகியவற்றைச் செய்து வாரக்கணக்கில் கூட வைத்து சாப்பிடுவார்கள்.

Diwali

அதனால் நிச்சயம் அஜீரணக்கோளாறு ஏற்படும். இதற்காகவே பலகாரங்கள் செய்யும்போதே மருத்துவ குணம் நிறைந்த வீட்டு மசாலா பொருட்களைக் கொண்டே தீபாவளி லேகியம் ஒன்றை நம் முன்னோர்கள் செய்வார்கள். அந்த செய்முறையை இங்கு பார்ப்போம்.

வெல்லத்தை நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து, வடிகட்ட வேண்டும். பின் மிளகு, மல்லி, ஓமம், சித்தரத்தை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை நீரில் 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஊறவைத்தவற்றுடன் சுக்குப்பொடியை சேர்த்து அரைக்க வேண்டும்.

Diwali

பிறகு இதை வெல்லப்பாக சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளற வேண்டும். அதன் பின் நல்லெண்ணெய் சேர்த்து 3 நிமிடம் கிளறி, இறுதியாக நெய் விட்டு இறக்கினால் தீபாவளி லேகியம் தயார். இதை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஆரோக்கியமானதும் கூட.