காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உங்கள் வீட்டு பிரஷர் குக்கரை சரியாகப் பயன்படுத்துகிறீர்களா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
நாம் உண்ணும் உணவு சுவையானதாய் இருப்பதுடன், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருப்பது அவசியம். சமைக்கும் நேரத்தை பெருமளவில் மிச்சப்படுத்தவும், எரிவாயுவின் பயன்பாட்டை குறைக்கவும் நமக்கு உற்ற நண்பனாய் இருக்கும் பொருள், பிரஷர் குக்கர். பிரஷர் குக்கிங் முறையில் சமைப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் வீணாவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எல்லா உணவுகளையும் குக்கரில் வைத்து, மூன்று அல்லது நான்கு விசில் வருவது வரை சமைப்பது சரியான அணுகுமுறையா? குக்கரில் சமைக்க கூடாத உணவுகள் என்று சிலவற்றை நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
பிரஷர் குக்கர், உணவுகளை பொரிப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. பொறிப்பதற்கு இதை பயன்படுத்தும் பொழுது தீ விபத்து, தீக்காயம் போன்றவை ஏற்படக்கூடும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விரைவாக வேகக்கூடிய காய்களை இதில் சமைக்கும் பொழுது, ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். கீரைகளை சமைப்பதற்கு குக்கரை பயன்படுத்த வேண்டாம். பால் பொருட்களை இதில் சமைக்கும் பொழுது அதன் தன்மை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
முட்டைகளை வேக வைக்கவும் இதனை பயன்படுத்த வேண்டாம். அரிசியை குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்தில் வைத்து வடித்து பயன்படுத்தும் பொழுது உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். இவற்றை கடைபிடிக்கும் பொழுது பிரஷர் (Pressure) குக்கிங், பிளஷர் (Pleasure) குக்கிங் ஆகிறது!