"உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கா? அப்போ மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!
தற்போதைய காலக்கட்டத்தில் பெருகி வரும் ஒரு பிரச்சனை தான் கொலஸ்ட்ரால். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் இந்த பிரச்சனை உள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கம் தான் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு காரணம். நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது.
அவை நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். இதில் உடலின் வளர்ச்சிக்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால் கெட்ட கொலஸ்ட்ராலினால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
எனவே உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்க வீட்டுவைத்திய முறையை பின்பற்றலாம். அதன்படி பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீருடன் மஞ்சள் தூள், கறுப்புமிளகுத் தூள் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
மேலும் பசுமஞ்சள் மற்றும் குறுமிளகையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இந்த மஞ்சள் மற்றும் மிளகு கசாயத்தை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு நிச்சயம் குறையும். மேலும் நரம்புகளில் கொழுப்பு படிவதையும் தடுக்கும்.