Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ட்ரை பண்ணி பாருங்க.!?
பொதுவாக குளிர்காலத்தை விட கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். நம் நுரையீரலில் சளி குறைந்த அளவு எப்போதுமே இருக்கும். சளி சாதாரண அளவில் இருக்கும் போது எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சளி உடலில் தேங்கி இருந்தால் இது பல தொல்லைகளை உடலில் ஏற்படுத்தும்.
சளி தொல்லையை சரி செய்ய பல ஆங்கில மருத்துவங்கள் இருந்தாலும், அது பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு பக்க விளைவுகள் இன்றி உடனடியாக சளி தொல்லை குணமடைய இந்த வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடனடியாக சளி தொல்லை சரியாகி மலம் வழியாக வெளியேறிவிடும்.
1. கற்பூரவள்ளி இலையை நசுக்கி கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு செய்த குழந்தைகளுக்கு நெஞ்சு பகுதியில் தடவி விடலாம்.
2. கற்பூரவள்ளி இலையின் சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி முற்றிலுமாக கரைந்து விடும்.
3. செம்பருத்தி பூவின் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேனூற்றி குடித்து வந்தால் நல்லது.
4. கொய்யா இலையை அரைத்து சாறு எடுத்து சுடு தண்ணீர் கலந்து குடித்து வர சளி முற்றிலுமாக வெளியேறிவிடும்.
5. துளசி, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை போன்றவற்றை நன்றாக இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சளி தொல்லை நீங்கும்.
6. தூதுவளை இலையை ரசம் வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளி தொல்லை முற்றிலுமாக குணமடையும்.