"எல்லா நோய்க்கும் ஒரு பாட்டி வைத்தியம் இருக்கு..என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!"



Home remedies for disease

நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கும் மிக எளிதான பாட்டி வைத்திய முறையில் தீர்வும் காணலாம். எறும்பு அல்லது ஏதாவது பூச்சி கடித்து வீங்கினால், அந்த இடத்தில் வெங்காயத்தை நறுக்கி தேய்க்கவும். உடல் எடை குறைய கொள்ளுப் பயிறு சாப்பிடலாம். 

Healthy

உடல் எடை கூட நல்லெண்ணையைக் கொடுக்கலாம். குடிநீரைக் காய்ச்சும்போது சுக்கை தட்டிப் போடலாம். இது ஜீரணத்திற்கும், மலச்சிக்கலுக்கும் மிகச்சிறந்த தீர்வாகும். வாய்ப்புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். 

கொத்தமல்லித் தழைகளை அரைத்து காலையில் குடித்துவந்தால் தலைவலி தீரும். தயிரை உடலில் தேய்த்து குளித்து வந்தால் வேர்க்குரு நீங்கும். வால்மிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட கபம் நீங்கும். சாதம் வடித்த நீரில் சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து குடித்தால் அஜீரணம் குணமாகும்.

Healthy

வெள்ளைப் பூசணிக்காயை துருவி உப்பு சேர்த்து இஞ்சி, பச்சைமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு தாளித்து தயிரில் கலந்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் அனைத்தும் குணமாகும். தினமும் வாழைப்பழம் உண்டால் உடல் எடை கூடும்.