குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
இந்த நோய் பாதிப்புகளுக்கு எளிமையாக வீட்டிலேயே பாட்டி வைத்திய முறையை செய்து பாருங்கள்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன உடலில் எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாக வேண்டும் என்பதற்காக ஆங்கில மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்கிறோம். இது நம் உடலில் உள்ள நோய் பாதிப்பை குணப்படுத்துவது, பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே எளிதாக பாட்டி வைத்தியம் செய்து பார்க்கலாம். இது குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. கீழே விழுந்து அடிபட்டாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ திரிபலா சூரணத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அடிப்பட்ட இடத்தில் கழுவி விட்டு திரிபலா சூரணத்தை தண்ணீர் கலந்து தடவி வந்தால் உடனடியாக சரியாகும்.
2. அடிபட்டு அதிகமான ரத்தப்போக்கு, காயங்கள், புண்கள் போன்றவற்றிற்கு அரக்கு சூரணத்தை தடவி வந்தால் குணமாகும்.
3. சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு தாளிசாதி சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.
4. இருமலுக்கு ஆடாதோட கசாயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
5. நாள்பட்ட ஆறாத புண்களுக்கு வேப்பிலை, மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை போன்றவற்றை வைத்து கசாயம் தயாரித்து கழுவி வந்தால் புண்கள் குணமாகும்.
6. வெள்ளைப்படுதலுக்கு கீழாநெல்லி கசாயம் அல்லது நெல்லிக்காய் தூளில் பனைவெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
7. தலைவலி ஏற்படும் போது இரண்டு சொட்டு நொச்சி இலை தைலத்தை மூக்கின் துவாரங்களில் தேய்த்து வந்தால் குணமாகும்.
8. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்சனைக்கு வெற்றிலை, துளசியை தேனில் அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
9. தீ புண்களுக்கு சோற்றுக்கற்றாழையில் உள்ள வெள்ளை நிற ஜெல்லை தடவி வரலாம்.