எண்ணெயில் பொறித்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்?
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்கள் பெரும்பாலும் எண்ணெயில் பொரித்த உணவுகளையே அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். அதன்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது திருப்தி அளித்தாலும், உடலுக்கு பல்வேறு வகையான தீமைகளை கொடுக்கிறது.
அதன்படி, எண்ணெய் பொருட்களில் உள்ள டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு உடல் எடையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், உடலில் தேவையற்ற கொழுப்பின் அளவையும் அதிகரிக்க செய்கிறது. இது நாள்பட்ட உடல் நல கோளாறுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
இதில் என்னை உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும், உடனடியாக சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். அதன்படி சிலருக்கு வீக்கம், செரிமான கோளாறு, குமட்டல் ஏற்படலாம். ஆனால் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சில எளிமையான பானங்கள் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
எனவே என்னை உணவுப் பொருட்களை சாப்பிட்ட பிறகு சூடான நீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது கொழுப்புகளின் முடிவை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் கனமான உணவை மிகவும் எளிதாக செரிமானம் செய்ய உதவுகிறது.
மேலும் சூடான நீரை குடிப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்க வைக்க உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் உணவில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது நிவாரணம் அளிப்பது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது.