திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இடி-மின்னல் ஏற்படும்போது, மின்விபத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.. மக்களே தவறாம தெரிஞ்சிக்கோங்க..!
மழைக்காலங்களில் இடி-மின்னல் தாக்குதல் என்பது இயல்பான ஒன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சில கவனமான செயல்முறைகளை கையாண்டால், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படலாம் தப்பலாம்.
மாறாக இடி-மின்னலிடம் விளையாட நினைத்தால், அது நம்மை பதம்பார்த்துவிடும் என்பதே நிதர்சனம். திறந்தவெளி பகுதிகளில் மின்னல் அங்குள்ள மரங்கள் மீதும் நேரடியாக பாயும் வாய்ப்புகளும் உள்ளன.
இடி-மின்னல் தாக்கினால் திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். கான்கிரீட் கட்டிடத்தில் தஞ்சம் அடையாளம். மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது. குடிசை வீட்டில் இருப்பதையும் தவிர்க்கலாம்.
மின்வாரிய மின்மாற்றிகள், மின் நிலையத்தில் உள்ள மின்கம்பி வேலிகள் அருகே சிறுநீர் கழிப்பதையும், அங்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து இருந்தால், அதனருகே செல்லமால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பம், அவற்றை தாங்கும் கம்பிகள் போன்றவற்றையும் மழை நேரங்களில் தொடக்கூடாது. மாடி வீடுகளில் இருப்போர் மின்வழிதட கம்பிகள் செல்வதற்கு அருகே செல்ல வேண்டாம்.
மின்சார பிரச்சனை காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைக்க வேண்டும். தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முற்பட கூடாது. உலர் மணல், கம்பளி, ரசாயன பொடி போன்றவற்றை மின்சாரத்தால் ஏற்படும் தீயை அணைக்க பயன்படுத்தலாம்.