மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிள்ளை பெற்ற தாய்மார்களின் கவனத்திற்கு! இப்படித்தான் தாய்ப்பால் கொடுக்கணுமாம்!"
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போல் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு இல்லை. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எந்த உணவுகளும் தரக்கூடாது. ஆனாலும் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்ததா என்ற சந்தேகம் எல்லா பெண்களுக்கும் இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பது குறித்து அதிக குழப்பங்கள் வேண்டாம். பொதுவாக குழந்தை அழுதால் பால் கொடுக்கச் சொல்லி வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள். ஆனால் குழந்தையின் அழுகைக்கு உடல்நலப் பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கலாம்.
மேலும் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மணி நேரங்களோ, சில தினங்களோ கூட ஆகும். மேலும் சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்களுக்கு ஆரம்பத்தில் எழுந்து அமர்ந்து தாய்ப்பாலூட்ட முடியாது.
அப்போது மற்றவர்கள் உதவியை நாடலாம்.
அம்மாவுக்கு எந்த உடல் நலப் பிரச்சனையும் இல்லாத நிலையில், குழந்தைக்குத் தேவையான பாலை அம்மாவின் உடல் தானாகவே சுரக்கும். ஸ்ட்ரெஸ் இல்லாமல் தங்களை வைத்துக் கொண்டாலே போதும். முதல் சில நாட்கள் படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.