"குளிர் காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?!"



How to get good sleep at winter season

குளிர் காலத்தில் நம்மில் பலருக்கும் அதிக குளிர் காரணமாக சரியாக தூக்கம் வராமல் இருக்கும். நிம்மதியான தூக்கத்திற்கு நம் படுக்கையறையை எப்படி வெப்பமாக வைத்திருப்பது என்று இந்த பதிவில் காண்போம். இதற்காக சில எளிதான மாற்றங்களை நம் படுக்கையறையில் செய்தாலே போதும்.

Lifestyle

குளிர்காலத்தில் பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் வீட்டில் தங்கும்படி அறைக்கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். பிறகு மாலையில் கதவை சாத்திவிட்டால், அரை நன்கு கதகதப்பாக இருக்கும். குளிர்காலத்தில் மரக்கட்டில்களில் படுத்தால் குளிர்ச்சியை தவிர்க்கலாம்.

இரண்டடுக்கு உயரமான மெத்தைகளை குளிர்காலத்தில் உபயோகப்படுத்தலாம். தேங்காய் நார்கள் கொண்டு செய்யப்படும் மெத்தைகள் உபயோகப்படுத்தலாம். போர்த்திக்கொள்ள மொத்தமான போர்வைகள் மற்றும் ஜமுக்காளங்களை உபயோகிக்கலாம். 

Lifestyle

அடர்நிறம் கொண்ட படுக்கை விரிப்புகள் வெப்பத்தை உறிஞ்சி படுக்கையறையை சூடாக வைத்திருக்க உதவும். படுக்கையறைக்குள் சூரிய ஒளி படர்வது அறையின் வெப்பநிலையை விரைவாக உயர்த்தும். மேலும் அரை வெப்பநிலையை உயர்த்தும்படியான திரைசீலைகளை பயன்படுத்தலாம்.