சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
பப்பாளியில் கூட்டா.? இப்படி செய்யுங்கள்.. சுவை அள்ளும்.!
பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பப்பாளி கூட்டு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் -3
சீரகப்பொடி -1 டீஸ்பூன்
தேங்காய் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 கப்
பழுக்காத பப்பாளி - 1
தாளிக்க :
கருவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
கடலை பருப்பை முதலில் 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அடுப்பில் கடாயை வைத்துக்கொண்டு கடாயில் தண்ணீரை ஊற்றி, கடலை பருப்பை சேர்த்து, 15 முதல் 20 நிமிடம் வரையில் மிதமான வெப்ப நிலையில் வேக வைக்கவும்.
கடலை பருப்பு நன்றாக வெந்தவுடன் பப்பாளியை அதில் சேர்த்து, 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். அடுத்தபடியாக மஞ்சள்தூளையும், உப்பையும் சேர்த்து கலக்கி கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கொண்டு, அரைத்து பேஸ்ட் செய்து பப்பாளியோடு சேர்த்து நன்றாக பிரட்டி 8 நிமிடம் வரையில் நன்றாக வேக வைக்கவும்.
இன்னொரு அடுப்பில் சிறிய அளவிலான கடாயை வைத்துக்கொண்டு, அதில் எண்ணெயை ஊற்றி அது காய்ந்தவுடன் தாளிப்பதற்கு தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து, தாளித்து பப்பாளி கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கி வைத்தால், சுவையான பப்பாளி கூட்டு ரெடியாகிவிடும்.