பஞ்சு போல் இட்லி வேண்டுமா... அப்ப ஒரு முறை இப்படி மாவு அரைத்து பாருங்கள்...



How to make soft idly in home

உங்கள் வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்து ஊற்றும் போது இட்லி மெதுவாக பஞ்சு போல் வரவில்லை கவலை வேண்டாம் ஒரு முறை இப்படி மாவு அரைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 5 கப்
உளுந்து - 1 கப்
வெள்ளை அவல் - கால் கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்

இட்லிக்கு மாவு ஊற வைக்கும் போது அரிசி, உளுந்து, அவல் மூன்றையும் ஒரே கப்பில் அளவு எடுக்க வேண்டும். பின்னர் அரிசியை மட்டும் தனி பாத்திரத்திலும் உளுந்து, அவல், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும். 

Soft idly

இவை அனைத்தும் ஒரு நான்கு மணி ஊறிய பிறகு உளுந்து கவலையை முதலில் கிரைண்டரில் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். பின்னர் அரிசியை கொட்டி அரைக்கவும், அரிசி முற்றிலும் நைஸ் பதத்திற்கு அரைக்கக் கூடாது. சற்று மொறமொறப்பாக அரைக்க வேண்டும்.

அதன்பின் உளுந்து மற்றும் அரிசி மாவை கலந்து அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கி ஒரு எட்டு மணி நேர வைத்தால் மாவு நன்கு உப்பி வரும். இப்பொழுது இட்லி ஊற்றினால் இட்லி நன்கு பஞ்சு போல் வரும்.