திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இட்லி மீந்தால் இட்லி உப்புமா, தோசை மீந்துவிட்டால் என்ன செய்வது?.. சுவையான தோசை பீஸ் பரோட்டா செய்து அசத்துங்கள்.!
நம்மில் பெரும்பாலானோர் இரவில் மீந்துபோன இட்லியை மறுநாளில் இட்டிலி உப்புமாவாக செய்து சாப்பிடுவோம். ஆனால், தோசை மீந்துவிட்டால் அதனை என்ன செய்வது என தெரியாமல் அப்படியே விட்டுவிடுவோம். இன்று தோசை மீந்தால் அதனை எப்படி சுவையான ரெசிபியாக மாற்றி சாப்பிடுவது என காணலாம்.
தேவையான பொருட்கள்:
கல் தோசை - 4,
வெங்காயம் - 3,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது - 2 சிறிய கரண்டி,
மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் - 1 கரண்டி,
மிளகுத்தூள், கரம் மசாலா - 1/2 கரண்டி,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பில்லை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
கடுகு, உளுந்து - தாளிக்க.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட கல்தோசையை சிறிய துண்டாக பரோட்டா போல வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்து முதலில் தாளிக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் உட்பட காய்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு குழைந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சில நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். இறுதியாக பிய்த்து வைத்த தோசையை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான தோசை பீஸ் பரோட்டா தயார்.