பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மனதை மட்டுமல்ல, முகத்தையும் பளபளப்பாக்கும் மில்லிகை பூ பேஸ் பேக்.!
பூக்களில் உள்ள வைட்டமின்கள், பிளவனாய்டுகள், ஆண்டி ஆக்சிடண்டுகள் போன்றவை மூலமாக முகம் இளமையாகிறது, மினுமினுப்பான பொலிவையும் பெறுகின்றன. நமது இல்லங்களில் சாதாரணமாக வளர்க்கப்படும் பூக்களில் இருந்து, அழகுக்காக வாங்கி சூடும் பூக்கள் வரை பல்வேறு பயன்கள் உள்ளன.
இவற்றில், மல்லிகை பூவுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஈரப்பதமூட்டும் பண்பிற்கு பெயர் பெற்றது ஆகும். இதனை சருமத்திற்கு உபயோகம் செய்தால், சருமம் பிரகாசமாக ஒளிரும். மல்லிகை பூ மற்றும் பூவின் இதழ்களில் இருந்து பேஸ் பேக் தயாரித்து அதனை முகத்தில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
மல்லிகை பூவின் இதழை எடுத்து, சிறிய உரலில் சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்து எடுக்க வேண்டும். இதனோடு ஒரு கரண்டி காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளபளப்பு பெரும்.
இதனைப்போல, மல்லிகை பூ இதழ் மற்றும் தயிர் சேர்த்து, இரண்டையும் அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி, 20 நிமிடம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும்.