தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குட்டிஸ்க்கு பிடித்த சுவையான ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
ஜவ்வரிசியில் பல விதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்த வகையில், இன்று ஜவ்வரிசி தோசை எப்படி செய்வது என காணலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - ஒன்றரை கிண்ணம்,
ஜவ்வரிசி மாவு - 1 கிண்ணம்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 4,
கடுகு - அரை கரண்டி,
சீரகம் - அரை கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட ஜவ்வரிசியை கழுவி தயிரில் 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி, அரிசி மற்றும் ஜவ்வரிசியை ஆட்டி எடுத்து கொள்ளவேண்டும்.
★இதன்பின், வானலியில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். பின் உப்பு சேர்த்து தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி எடுத்தால் சுவையான ஜவ்வரிசி தோசை தயார்.