#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண்களின் இரத்த சோகை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.. நன்மைகளை வாரிவழங்கும் முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?..!
இரத்த சோகையையும், நம் உடம்பில் புதிய இரத்த உற்பத்தியை கூட்டும் முருங்கைக்கீரை அடை செய்வது குறித்து இன்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - ஒரு ஆழாக்கு,
கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு,
துவரம் பருப்பு - கால் ஆழாக்கு,
உளுந்து - 5 ஸ்பூன்,
மிளகாய் காய்ந்தது - 5,
பூண்டு - 5 பற்கள்,
முருங்கை கீரை - 2 கட்டு,
சின்ன வெங்காயம் - 15.
செய்முறை:
முதலில் ஒரு ஆழாக்கு இட்லி அரிசி, அரை ஆழாக்கு கடலைப்பருப்பு, கால் ஆழாக்கு துவரம் பருப்பு, ஐந்து ஸ்பூன் உளுந்து, 5 காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற விடவும்.
பின்பு கிரைண்டரில் அரிசி, பருப்பு கலவையை போட்டு, ஒரு கட்டி பூண்டு உரித்து போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முருங்கைக்கீரை, ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் 15 எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து வதக்கவும்.
முருங்கை கீரையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நாம் அரைத்து வைத்த மாவை எடுத்து, நாம் வதக்கிய முருங்கைக் கீரையை போட்டு தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும்.
பின்பு சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன், அடுப்பில் தோசை கல்லை வைத்து மாவை ஊற்றவும். இப்போது மொறுமொறு முருங்கை கீரை அடை தயார். இந்த அடையுடன் தேங்காய் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.