மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா.. பாஸ்தாவில் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா?.. வீட்டிலேயே ருசியாக செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே அசத்துங்கள்..!!
குழந்தைகளுக்கு பாஸ்தா என்றாலே கொள்ளை பிரியம்தான். அதிலும் பாஸ்தாவில் பிரியாணி செய்துகொடுத்தால் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
பாஸ்தா - 300 கிராம்
குடைமிளகாய் - 2
கேரட், பீன்ஸ் - உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப
தக்காளி - மூன்று
வெங்காயம் - நான்கு
கொத்தமல்லி, புதினா - அரைக்கட்டு
தயிர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள், கரம் மசாலா - இரண்டு ஸ்பூன்
தனியாத்தூள் - இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
★முதலிலேயே கொதிக்கும் நீரில் பாஸ்தாவை போட்டு அரையளவு வெந்ததும், அதனை இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கியதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும்வரை வதக்கவும்.
★பின்னர் தக்காளியை வதக்கி, காய்கறிகள் கொத்தமல்லி, புதினா, குடைமிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இறுதியாக மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து மூடிவைத்து காய்கள் வேகுவதற்கு தண்ணீர் ஊற்றி அது வந்ததும் பாஸ்தாவை சேர்த்து கிளறி சுடச்சுட பரிமாறலாம்.