உங்க வீட்டு குட்டீஸ் கேடான சமோசா சாப்பிடுதா?.. வீட்டிலேயே கீரை சமோசா செய்து கொடுத்து அசத்துங்கள்.! டிப்ஸ் இதோ.!



how-to-prepare-spinach-samosa

 

எப்போதும் குழந்தைகள் கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்கிறார்கள், அவர்களின் உடல்நலன் என்னவாகும் என இன்றளவில் பல பெற்றோர்களும் கவலையுற தொடங்கிவிட்டனர். 

ஏனெனில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணமே இருக்கிறது. இவற்றின் சுவை குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் வசியப்படுத்துகிறது.

இவ்வாறான பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்று சுவையான கீரை சமோசா செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள்: 

மைதா மாவு - 300 கிராம்,
நீங்கள் விரும்பும் கீரை - 2 கையளவு,
வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 4 (உங்களின் காரத்திற்கேற்ப),
முட்டை கோஸ், கேரட் துருவல் - 1 சிறிய பவுல்,
உருளைக்கிழங்கு - 3,
கரம் மசாலா, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

health tips

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட மைதா மாவுடன் தண்ணீர், முட்டை, சிறிதளவு சீனி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து அரைமணிநேரம் மூடி வைக்க வேண்டும். 

பின் கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, உருளையை வேகவைத்து தோல் நீக்கி மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்க்கு, வெங்காயம் ஆகியவற்றை பொடிபொடிய நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 

வானலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, கேரட் மற்றும் கோஸ் துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய காய்கறிகளுடன் உருளைக்கிழங்கு, மசாலா, உப்பு சேர்த்து பின் அடுப்பை அணைத்துவிடவும்.

மைதா மாவை பின் சமோசா பதத்திற்கு கிடைக்க நீள் செவ்வக வடிவில் தேய்த்து, அதனுள் மேலே தயார் செய்த கலவையை வைத்து எண்ணெயில் இட்டு பொரித்து எடுத்தால் சுவையான கீரை சமோசா தயார். 

சமோசாவுக்கான செவ்வக வடிவம் வராத பட்சத்தில், மைதா மாவை சிறிய அளவிலான பூரி பதத்திற்கு தேய்த்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து சுருட்டி பொரித்து எடுக்கலாம்.