சுவையான வடை மோர் குழம்பு தயார் செய்வது எப்படி?.. சுட்டீஸுக்கு பிடித்ததை செய்து கொடுத்து அசத்துங்கள்.!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி சாப்பிடும் வடை மோர் குழம்பு இன்று எப்படி செய்வது என காணலாம்.
தேவையான பொருட்கள்:
மெதுவடை அல்லது பருப்பு வடை - 10,
தயிர் - ஒரு கப்,
மஞ்சள் தூள் - அரை கரண்டி,
பெருங்காயத்தூள் - கால் கரண்டி,
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு,
அரிசி - ஒரு கப்,
துவரம் பருப்பு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - ஒன்று,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
பூண்டு - ஐந்து பல்,
இஞ்சி - சிறிதளவு
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி எடுக்கவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் துவரம் பருப்புடன் சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் நீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுது போல எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றை அரிசி விழுதுடன் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க சேர்க்க வேண்டிய பொருளை இட்டு, அரைத்து விழுதுகளை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இதனை மிதமான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் கரைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இறுதியாக கறிவேப்பில்லை, கொத்தமல்லி தூவி பரிமாறினால் வடை மோர் குழம்பு தயார்.