திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுவையான வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு வீட்டில் செய்வது எப்படி?.. சுலபமான வழி இதோ.!
வார இறுதி நாட்களில் சுவையான மீன் குழம்பு செய்ய அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். இன்று சுவையான வஞ்சரம் மீன் தேங்காய்ப்பால் குழம்பு செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
வஞ்சரம் மீன் - 1 கிலோ,
தேங்காய் பால் - 3 கிண்ணம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 5,
பூண்டு - 3,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 6 அல்லது காரத்திற்கேற்ப,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
மிளகாய் தூள் - 2 கரண்டி,
மல்லித்தூள் - 1 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
கல் உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
முதலில் வாங்கிய வஞ்சரம் மீனை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வெங்காயம் & தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி - பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி குழைந்த பதத்திற்கு வந்ததும் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து அரைக்கப் நீருடன் கொதிக்க விடவேண்டும்.
குழம்பு நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து வேகா வைத்து, மீன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கலாம்.