பிறந்தது புரட்டாசி மாதம்: முட்டை இல்லாமல் சைவ ஆம்லேட் செய்வது எப்படி?..!



How to Prepare Veg Omelette Without Egg 

 

காலநிலை மாற்றத்தின் காரணமாக தொற்றுநோய்கள் எளிதில் பரவும் மாதமாக கருதப்படும் புரட்டாசியில், அசைவ வகை உணவுகளை தவிர்க்க முன்னோர்கள் வழிபாடுகளை நம்முடன் இணைத்து வைத்தனர். 

இதனால் இம்மாதத்தில் அசைவ வகை உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. எம்மாதமும் எனக்கு உணவு வகைகளுக்கு கணக்கில்லை என்போர், அவர்களின் விருப்பத்திற்கேற்ப சாப்பிடலாம். 

புரட்டாசி மாத விரதம் இருப்போர், அசைவ உணவுகளை எடுக்காதோர் சைவ வகையில் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இன்று அதுகுறித்து நாம் தெரிந்துகொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு - 1 கிண்ணம், 
வெங்காயம் நறுக்கியது - 2,
தக்காளி நறுக்கியது - 1,
பச்சை மிளகாய் நறுக்கியது - 2,
கொத்தமல்லி தழை, கறிவேப்பில்லை - சிறிதளவு,
மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு,
மிளகாய் தூள், கரம் மசாலா - 1/4 கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பில்லை ஆகியவற்றை முதலில் சேர்த்துக்கொள்ளவும். 

பின் இதனுடன் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, எண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து டம்ப்ளர் நீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 

இந்த கலவையை 10 நிமிடத்திற்கு ஊறவைத்து, பின் தோசைக்கல்லில் ஆம்லெட் போல ஊற்றி எடுத்தால் சுவையான வெஜ் ஆம்லெட் தயார். இதனை சூடாக சாம்பார் சாதம், ரசம் உட்பட பல உணவுகளுக்கு சேர்த்து சாப்பிடலாம்.