#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடுமுறை நாள் சிறப்பு உணவு: சுவையான குழந்தைகளுக்கு பிடித்த வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி?.!
குழந்தைகள் என்றாலே பொதுவாக காய்கறிகள் சாப்பிட கொஞ்சம் அடம் பிடிக்கும். அவர்களுக்கு காய்கறிகளை சப்பாத்தியுடன் சேர்த்து வெஜிடபிள் சப்பாத்தி என புதுவிதமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு,
முட்டை - 1,
காய்ச்சிய பசும்பால் - 100 மில்லி,
நெய் - இரண்டு ஸ்பூன்,
பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - மாவுக்கு ஏற்ப அல்லது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப,
புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு கரண்டி.
செய்முறை:
+முதலில் எடுத்துக் கொண்ட காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும்.
+பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, பச்சை வாசனை போகும்வரை காய்கறிகளை வதக்க வேண்டும்.
+இதனோடு மசித்த உருளைக்கிழங்கு காய்கறி கலவை உப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
+பின்னர் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அதனோடு காய்கறி கலவையை சேர்க்கலாம் அல்லது உருண்டை பிடிக்கும் போது காய்கறி மசியலை சேர்த்துக்கொள்ளலாம்.
+இறுதியாக சப்பாத்தி போல அனைத்தையும் தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் சப்பாத்தி தயார்.