உடலை நோயில் இருந்து விரட்டி பாதுகாக்கும் வேப்பம்பூ ரசம்.. வீட்டிலேயே செய்வது எப்படி..!
நம் வீட்டில் உள்ள குட்டீஸுக்கு அவ்வப்போது வயிற்றில் பூச்சி உருவாகும். இதனை அழிக்க இன்றளவில் மாத்திரைகள் கொடுக்கிறார்கள். ஆனால், வேப்பம் பூ ரசம் அதற்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உடையோருக்கு வேப்பம் பூ ரசம் பேருதவி செய்யும். இன்று வேப்பம்பூவில் ரசம் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - கைப்பிடி அளவு,
புளி - நெல்லிக் காய் அளவு,
கடுகு - ஒரு கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் எண்ணெய், கடுகு, மிளகுக்காய் சேர்த்து தாளித்து புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
இவை கொதிக்க தொடங்கியதும், வறுத்து வைத்திருந்த வேப்பம்பூவை சேர்க்க வேண்டும். இதனோடு பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கும் தருவாயில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்க வேண்டும்.
இந்த ரசத்தை குழந்தைகளுக்ளு வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டு முறை என கொடுத்து வந்தால் வயிற்று பூச்சிகள் சரியாகும். நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். நாவறட்சி, அரிப்பு, தோல் வியாதிகள் சரியாகும்.