பாகற்காயில் இருக்கும் கசப்பை போக்க சில எளிய டிப்ஸ்கள்... இப்ப கசப்பே இருக்காது...



How to remove the kasappu in bitter gourd

பொதுவாக பாகற்காயில் அதிகப்படியான கசப்பு தன்மை இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதனை உணவில் சேர்த்து கொள்வது கிடையாது. பாகற்காயை உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாசியழற்சி போன்ற சுவாச பிரச்சினைகள் குணமாகிறது. 

பாகற்காயின் கசப்பை குறைக்க சில எளிய மற்றும் எளிதான சமையலறை தந்திரங்களைப் பயன்படுத்தி கசப்பைக் குறைக்கலாம். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. பாகற்காயை சிறிது சிறிதாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து ஊற வைத்து விட்டு பின்னர் சமைக்கும் போது கசப்பு தன்மை குறைந்து காணப்படும்.
2. கசப்பை குறைக்க மற்றொரு எளிய முறை பாகற்காயை அரிந்து உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு சமைத்தால் கசப்பு தன்மை குறைந்து காணப்படும்.

Kasappu
3. பாகற்காயை சிறிது சிறிதாக நறுக்கி பிறகு அதில் சிறிதளவு தயிர் சேர்த்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு நன்கு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை இன்றி சுமையாக இருக்கும். 
4. நன்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் உப்பு கலந்து அதில் விதைகளை நீக்கிய பாகற்காய் துண்டுகளை போட்டு வைத்து பிறகு சமைத்தால் கசப்பின்றி சுவையாக இருக்கும்.