"உங்களுக்கு இந்த நோய் இருந்தா நீங்க பப்பாளி சாப்பிடக் கூடாது!" என்ன காரணம் தெரியுமா.?



If you had any of these disease Avoid papaya

பொதுவாக பப்பாளி ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். இது ஒரு அதிக நார்ச்சத்துள்ள மற்றும் ஏராளமான ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பப்பாளியை தொடர்ந்து உட்கொள்வது எடை இழப்புக்கு வழி வகுக்கும்.

Papaya

மேலும் பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கியாகும். ஆனால் இந்த பழம் எல்லோருக்கும் உகந்ததல்ல. சிலருக்கு இதை உண்பது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அரிப்பு, வீக்கம், படை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் கர்ப்பிணிகள் இதை உட்கொள்ளும்போது இது கருவை பாதிக்கலாம்.

பப்பாளியில் ரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் கே உள்ளது. இதனால் ரத்தம் உறைதலில் பிரச்சனை இருப்பவர்கள் வைட்டமின் கே நிறைந்த பப்பாளி உட்கொள்வது கூடாது. இது இதயநோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

Papaya

ஆனால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியைத் தவிர்ப்பது நல்லது. மேலும் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும். மேலும் சிறுநீரத்தில் கல் உள்ளவர்களுக்கு பப்பாளி மேலும் பிரச்னையை தீவிரமாக்கும்.