மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்கள் குழந்தை எப்போதும் டயப்பரில் தான் இருப்பார்களா.? அப்போ இதோ சின்ன அட்வைஸ்.!
சௌகரியம் கருதி இன்று பலரும் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள். அடிக்கடி மாற்ற தேவை இல்லை என்பதாலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் குழந்தையின் தூக்கம் பாதிக்காமல் இருக்கும் என்றும், வெளியே செல்லும்போதும் அதனை உபயோகிக்கிறார்கள்.
அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் (UTI) அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. நாள் முழுவதும் டயபர்களை உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு தோலில் அழற்சி,வெடிப்பு மற்றும் எரிச்சல் உண்டாக்கலாம்.
தற்போது காட்டன் டயப்பர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை துவைத்து திரும்பவும் உபயோகப்படுத்த முடியும். அது குழந்தைகளின் தோலுக்கும் எந்தவித கெடுதலும் செய்யாது. இதன் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். துணியால் ஆன டயப்பர்கள் செலவை மிச்சப்படுத்தும்.
எப்பொழுது அணிவித்த டயபரை மாற்ற வேண்டும்? ஈரம் கசிந்தால், அல்லது டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்து விட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.