மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா எப்படி செய்யணும் தெரியுமா?!"
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்புகள் என்றாலே மிகவும் பிடிக்கும். இந்த இனிப்புகளை சர்க்கரை, வெல்லம், கற்கண்டு ஆகியவற்றை வைத்து செய்யலாம். இவை மிகவும் சுவையாக இருப்பதாலேயே அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அந்த வகையில் கேரளாவின் ஸ்பெஷல் இனிப்பு ஐட்டமான பிளாக் ஹல்வா வாயில் வைத்ததும் கரையும் தன்மை கொண்டது. இதை எப்படி சுவையாகவும், மணமாகவும் செய்வது என்று இப்போது பார்ப்போம். இது அரிசி மாவு, தேங்காய், நாட்டுச்சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
முதலில் ஒரு மூடி தேங்காயை துருவிக் கொள்ளவேண்டும். இதை மிக்சியில் அரைத்து 2 கப் அளவு தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1-1/2 கப் அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கி, பின்னர் அதில் 1/4 கப் அரிசி மாவு சேர்த்து, இந்த பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி, ஹல்வா பதம் வரும் வரை கிளறவேண்டும். இதையடுத்து நெய்யில் வறுத்த முந்திரியை ஹல்வாவில் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா ரெடி.