#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளை தொடவே கூடாது?
தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக கல் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டாலும் மீண்டும் மீண்டும் உருவாகி பல தொந்தரவுகளை கொடுக்கிறது.
எனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் உணவில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதன்படி சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் கீரை, எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் குளிர்பானங்கள் மற்றும் டி மற்றும் காபி குடிப்பதை நிறுத்திக் கொண்டால் உடலுக்கு நல்லது. குறிப்பாக உணவில் உப்பு குறைவான அளவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அதேபோல் புரதம் நிறைந்த இறைச்சி மற்றும் மீன்களை தவிர்ப்பது நல்லது. புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தை அதிக அளவில் பாதிப்படைய செய்யும். எனவே இந்த உணவுகளை எல்லாம் சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.