காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
குட்டீஸ் ஃபேவரைட் பிரேக் ஃபாஸ்ட்.!! சுவையான வெஜ் பிரட் டோஸ்ட் ரெசிபி.!!
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! வாங்க சுவையான வெஜ் பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்: 10 பிரட் துண்டுகள், 2 பெரிய வெங்காயம், 2 கேரட், 2 பச்சை மிளகாய், 1 குடைமிளகாய், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் தேவையான அளவு, 10 பீன்ஸ், 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
செய்முறை: முதலில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, பீன்ஸ் ஆகியவற்றை கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வானலியில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் உப்பு சேர்த்து கலந்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அதிலேயே மசித்து விடவும்.
பின் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு பிரெட் துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை வைத்து அதன்மேல் மற்றொரு பிரெட்டில் மூடி விடவும். ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் பிரெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜ் பிரட் டோஸ்ட் தயார்