நீங்க பிஸ்கட் பிரியரா? அப்போ இதை படிங்க!"



Latest news about biscuits

நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபியுடன் சில பிஸ்கட்டுகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்து வேலை செய்துவிட்டு காலை உணவு சாப்பிடும் வரை பசி தாங்குவதற்கு இந்த பிஸ்கட் தான் உதவுகிறது என்று நினைக்கிறோம்.

Biscuit

ஆனால் உண்மையில் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவை என்னென்ன என்று இங்கு காண்போம். பிஸ்கட்டில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. இது முகப்பரு ஏற்பட காரணமாகிறது. இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் ஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. 

மேலும் இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதில் எந்த ஊட்டச்சத்தும் இல்லாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். மேலும் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். பிஸ்கட்டில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படும். 

Biscuit

பிஸ்கட்டில் சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ்பேட் அதிகளவில் உள்ளதால் இதயநோய் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதில் அதிகளவில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கும். எனவே அதிகளவில் பிஸ்கட் உண்பதை தவிர்த்தல் நலம்.